» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நடுக்கடலில் படகு பழுதானதால் பரிதவித்த குமரி மீனவர்கள் மீட்பு

புதன் 26, ஜூன் 2019 1:56:15 PM (IST)

நடுக்கடலில் விசைப்படகு பழுதானதால் பரிதவித்த 23 குமரி மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

கன்னியாகுமரி ஒற்றையால்விளை பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜன்(48). இவருக்கு சொந்தமான விசைப்படகில் சந்திரமோகன் உள்பட 23 மீனவர்கள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கரையில் இருந்து 25 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென படகின் என்ஜின் பழுதானது. இதனால் கரைக்கு திரும்ப முடியாமல் பரிதவித்தனர்.

இதுபற்றி மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் ரோந்து படகுகள் பழுதாகி நீண்ட நாட்களாக கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், ஆழ்கடலில் பரிதவித்த மீனவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர், இதுபற்றி தூத்துக்குடி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சக மீனவர்கள் தங்களது விசைப்படகில் ஆழ்கடலில் பரிதவித்த மீனவர்களை தேடி சென்றனர். அப்போது, பழுதான படகில் உள்ள மீனவர்கள் தூத்துக்குடி கடற்கரையில் இருந்து 35 கடல் மைல் தொலைவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சக மீனவர்கள் நேற்று மாலை 3.30 மணியளவில் பழுதடைந்த விசைப்படகை கண்டுபிடித்தனர். அந்த படகில் இருந்த 23 பேரும் உணவு, தண்ணீர் இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு, பழுதடைந்த விசைப்படகையும் கயிறு மூலம் கட்டி இழுத்து நேற்று இரவு 7 மணிக்கு கரைக்கு கொண்டு வந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory