» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை : ஆலோசனை கூட்டத்தில் முடிவு

புதன் 26, ஜூன் 2019 1:34:59 PM (IST)

நாகர்கோவிலில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில் நகரப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட பால்வளத் தலைவர் எஸ்.ஏ.அசோகன், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) வேத அருள்சேகர், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், உள்டளகலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் மையம் தொடங்கி, பொதுமக்களிடம் பெறப்படும் புகாரை பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி குறித்த காலத்தில் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட வேண்டும். நகரில் தற்சமயம் 863 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அவற்றில் 43 ஆழ்துளை கிணறுகள் பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. நகரில் பயன்படுத்த இயலாத ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக புதிய போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நகரில் பிரதான சாலையாக உள்ள அவ்வை சண்முகம் சாலை அமைக்க 12-7-2019 அன்று டெண்டர் கேட்கப்பட உள்ளதை தொடர்ந்து 25-7-2019-க்குள் முடிக்கப்பட வேண்டும். நகரில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். குடிநீர் பிரச்சனை நிலவும் இந்த நேரத்தில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் பலத்த மழை: நெல் அறுவடை பாதிப்பு

வியாழன் 17, அக்டோபர் 2019 11:15:10 AM (IST)

குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்

வியாழன் 17, அக்டோபர் 2019 10:18:32 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory