» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இரணியலில் மறியலுக்கு முயன்றதாக 22 பேர் மீது வழக்கு

புதன் 12, ஜூன் 2019 7:45:52 PM (IST)

இரணியலில் மறியலுக்கு முயன்றதாக 22 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கட்டடம் மிக மோசமான நிலைமையில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகுப்பறை கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட் கட்சி சார்பில் இந்த பள்ளிக்கு உடனடியாக சீரமைத்து தர கோரி தொட்டியோடு ரோட்டில் மறியல் செய்ய முயற்சி நடந்தது. 

இதில் ஏழு பெண்கள் உட்பட 22 பேர் கலந்து கொண்டனர். இதுகுறித்து அறிந்ததும் போலீசார் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி மறியல் செய்ய முயன்றவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர். இந்நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக முத்து என்பவர் உட்பட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory