» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தீங்கிற்கு உள்ளான குழந்தைகளிடமிருந்து புகார் மனு பெறுதல் : குமரி ஆட்சியர் அறிவிப்பு

புதன் 12, ஜூன் 2019 1:37:45 PM (IST)

பல்வேறு தீங்கிழைத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகளிடமிருந்து புகார் மனு கோருதல் குறித்து கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான வன்முறைகள் ஃ தீங்கிழைத்தல் குறித்த புகார்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் வகையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் 21.06.2019 அன்று கன்னியாகுமரி மாவட்டம் உட்பட தமிழ்நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கான சிறப்பு அமர்வு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படவுள்ளது. 

எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகள் மற்றும் தீங்கிழைத்தலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில் குழந்தைகள் அல்லது அவர்களுடைய பெற்றோர் ஃ பாதுகாவலர் புகார்களை சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

எனவே பொதுமக்கள், பெற்றோர் மற்றும் குழந்தைகள் தங்களுக்கோ அல்லது தங்கள் பகுதியிலோ பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருப்பின்  புகார்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் என்ற முகவரிக்கு 19.06.2019 அன்று மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி தெரிவிக்கப்படுகிறது. கூடுதல் விபரங்களுக்கு 04652 - 278980 என்ற எண்ணினை தொடர்பு கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory