» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பருவமழை தொடங்கியதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை

புதன் 12, ஜூன் 2019 1:09:37 PM (IST)

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து தென் மாவட்டங்களில் பருவ மழை பெய்யத் தொடங்கியது. இதனால் குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக கடந்த 8ம்தேதி தொடங்கியது. இந்த மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் கூறியது.அதற்கேற்ப கேரளா முழுவதும் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் அரபிக்கடலில் உருவான வாயு புயல் காரணமாகவும் பலத்த மழை பெய்கிறது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய ஓரிரு நாளில் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் பருவமழை தொடங்கும். குமரி மாவட்டத்தில் கடந்த 8-ந்தேதியே தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது.

இது மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்குவோரை மீட்கவும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory