» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் அணைகள் நீர்இருப்பு உயர்கிறது.

புதன் 12, ஜூன் 2019 11:37:53 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக பெய்து வரும் தொடர் மழையினால் பெருஞ்சாணி அணையில் ஒரே நாளில் 5  அடி நீர் மட்டம்  அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக வெயில் வாட்டிவதைத்து வந்தது. இதனால் எப்படி சமாளிப்பது என பொதுமக்கள் அஞ்சி வந்த நிலையில் தென்மேற்கு பருவமழை கேரளத்தில் பெய்ய தொடங்கி யதையடுத்து,  குமரி மாவட்டத்தில் கடந்த  8  ஆம் தேதி தொடங்கிய மழை,  தொடர்ந்து 4 நாள்களாக மாவட்டம் முழுவதும்  பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் அரபிக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. இதனால் குமரி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை விடிய,  விடிய மழை பெய்தது.  

செவ்வாய்க்கிழமை காலையிலும் வானம் மழைக்கான மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மழை கொட்டி தீர்த்தது. இதனால்,  மீனாட்சிபுரம் சாலை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, கோட்டாறு சாலைகளில், மழை நீர் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடியது. அணைப்பகுதியில் பலத்த மழை: மலையோரப் பகுதியான பாலமோர் மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியிலும்  பலத்த மழை பெய்தது. 

பேச்சிப்பாறை  அணை மற்றும் சுருளகோடு பகுதியில் அதிகபட்சமாக 102.4மி.மீ.,   பெருஞ்சாணி அணைப்பகுதியில் 92.4 மி.மீ.  மழை பதிவானது. தொடர் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory