» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் விலை உயர்வு

புதன் 12, ஜூன் 2019 11:13:44 AM (IST)

குமரி மாவட்டத்தின் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருளான ரப்பரின் விலை செவ்வாய்க்கிழமை கிலோவிற்கு ரூ. 130.50 ஆக உயர்ந்தது.

ரப்பர் விலையை நிர்ணயிக்கும் கோட்டயம் ரப்பர் சந்தையில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக ரப்பர் விலை உயர்ந்து வருகிறது. ரப்பர் உற்பத்தி குறைவு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு ரப்பர் அதிகம் உற்பத்தியாகும் குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் வகையில் உள்ளது. செவ்வாய்க்கிழமை கோட்டயம் சந்தையில் தரம் பிரிக்கப்படாத ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 130.50 ஆகவும்,  ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 148 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 145 ஆகவும் உயர்ந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory