» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

18 சிபிஎஸ்இ. பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுகிறது : குமரி மாவட்டஆட்சியர் அறிவிப்பு

செவ்வாய் 11, ஜூன் 2019 8:39:21 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்வடநேரே அறிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்து வகைப்பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும் என மாவட்டம் ஆட்சியரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளி மாணவ, மாணவியர் அரசால் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளை எழுதமுடியாத நிலை ஏற்படும் என்றும் இந்த பள்ளிகளால் வழங்கப்படும் கல்விச் சான்றுகள் தகுதியற்றதாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என மாவட்டஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

அருண்Jun 13, 2019 - 09:08:39 AM | Posted IP 137.9*****

அது என்ன அங்கீகாரம். எப்புடி கண்டுபுடிக்குறதுன்னு சொல்லுங்க.

அருண்Jun 12, 2019 - 09:37:50 AM | Posted IP 137.9*****

எந்த ஸ்கூல் னு போடுங்க மக்கா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory