» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லதடை

செவ்வாய் 11, ஜூன் 2019 6:25:11 PM (IST)

அரபிக்கடலில் உருவான வாயு புயல் காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கேரளாவையொட்டி அரபிக்கடலில் வாயு புயல் உருவாகி உள்ளது.அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக குமரி மாவட்ட கடல் பகுதியிலும் சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இன்று முதல் 13-ந்தேதி வரை மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும். இதுபோல கடலில் 3.5 மீட்டர் முதல் 4 மீட்டர் உயரத்திற்கு அலை எழும்பும் என்றும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.புயல் காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் எச்சரிக்கை அறிவிப்பு கடலோர கிராம பங்கு தந்தையர் மூலம் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory