» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அதிமுக தோற்றதற்கு காரணம் சின்னக் குழந்தைக்கும் தெரியும்: சி.த. செல்லபாண்டியன் விமர்சனம்

செவ்வாய் 11, ஜூன் 2019 3:51:52 PM (IST)

"அதிமுகவின் தோல்விக்கு காரணம் பாஜக-தான் என்பது, சின்னக் குழந்தைக்கும் தெரியும்" என்று அதிமுக அமைப்புச் செயலாளர் சி.த. செல்லபாண்டியன் விமர்சித்துள்ளார்.

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. ஏற்கெனவே மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், அதிமுகவினர் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுகவின் தோல்விக்கு பாஜக தான் காரணம் என அதிமுக அமைப்புச் செயலாளர் செல்லபாண்டியன் விமர்சித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில்  நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய சி.த.செல்லபாண்டியன், "அதிமுக ஏன் தோற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். பாஜக தான் காரணம் என, சின்னக் குழந்தையிடம் கேட்டால் கூட சொல்லும். இது இயற்கை. அதில் மாற்றுக் கருத்து கிடையாது. தனித்து நின்றிருந்தால் அத்தனை இடங்களையும் அதிமுக கைப்பற்றியிருக்கும், அதில் மாற்றுக்கருத்து கிடையாது", என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணனும் கலந்துகொண்டார். அமைச்சர் முன்னிலையில் செல்லபாண்டியன் அதிமுகவை விமர்சித்துள்ளார்.


மக்கள் கருத்து

ராமநாதபூபதிJun 13, 2019 - 05:31:48 PM | Posted IP 162.1*****

பிறகு எதுக்கு தமிழிசை கூட ஓட்டு கேட்டு போனீரு

பாமரன்Jun 12, 2019 - 01:05:54 PM | Posted IP 162.1*****

மதவெறி மட்டும் அல்ல பணவெறி பதவி வெறி ..

ஸ்.சிவராமன்.Jun 12, 2019 - 09:30:25 AM | Posted IP 162.1*****

இவர் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி உழைத்தார் என்று தூத்துக்குடி மக்களுக்கு நன்றாக புரியும் மத வெரி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory