» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏ.,வுடன் பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு: மாநில மாநாட்டிற்கு அழைப்பு

செவ்வாய் 11, ஜூன் 2019 12:21:46 PM (IST)



தூத்துக்குடியில் எஸ்பி சண்முகநாதன் எம்எல்ஏவை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் சந்தித்து மாநில மாநாடு விழா அழைப்பிதழை வழங்கினர். 

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில மாநாடு வரும் ஜூன் 22ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இதில் மூத்த பத்திரிக்கையாளர்கள் 100 பேருக்கு விருது வழங்கப்படுகிறது. மேலும், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பத்திரிக்கையாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுத் தொகை, சாதனையாளர்களுக்கு விருது  வழங்கப்பட உள்ளது. மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டிலுள்ள ஹோட்டல் பானுபிருந்தாவன் கிரீன் பார்க்கில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர், பொருளாளர் ஞானதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த பத்திரிக்கையாளர் குமாரவேல் மாநாடு குறித்த சிறப்புரை ஆற்றினார். தூத்துக்குடி மாநகர் மாவட்டத்தில் இருந்து அனைத்து உறுப்பினர்களும் மாநாட்டில் கலந்து கொள்வது, மாநாட்டு சிறப்பு மலர் வெளியிடுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. 

இதையடுத்து முக்கிய பிரமுகர்களுக்கு மாநாடு அழைப்பிதழ் வழங்கும் பணி தொடங்கியது. ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ எஸ்பி சண்முகநாதனிடம் நிர்வாகிகள் மாநாட்டு அழைப்பிதழ் வழங்கி  சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில், முக்கிய நிர்வாகிகள் முத்துபாண்டி, விஜயராஜ், வள்ளிராஜ், நாகராஜ், இபுன், நீதிராஜன், முத்துமாடசாமி, கருப்பசாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

மனோகர்Jun 11, 2019 - 07:58:45 PM | Posted IP 162.1*****

மாநாடு சிறக்க நல் வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory