» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரயில்நிலையத்தில் 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்

சனி 18, மே 2019 8:22:31 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கேரளாவுக்கு கடத்த வைத்திருந்த சுமார் 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டு உள்ளது.நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும்படை தாசில்தார் அப்துல்லா மன்னானுக்கு தகவல் கிடைத்தது.அவர் தலைமையில் தனித்துறை வட்டாட்சியர் முருகன், வருவாய் ஆய்வாளர் ரதன்ராஜிகுமார் மற்றும் டேவிட் ஆகியோர் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது சாக்குமூடைகளில் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 1 டன் ரே‌ஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory