» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம்

சனி 18, மே 2019 7:28:07 PM (IST)



வாக்கு எண்ணிக்கை நாளன்று கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் எடுத்துரைத்தார்.

2019 பாராளுமன்றதேர்தலுக்கான வாக்குஎண்ணிக்கை 23.05.2019 அன்று கோணம் அரசு தொழிற்நுட்ப கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் பணியை சரியான முறையில் மேற்கொள்ள அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூட்டம் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்வடநேரே தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், அனைத்து தொகுதிகளிலும் சுற்று வாரியாக வாக்குப்பெட்டிகள் எண்ணும் விதம், தபால் வாக்குகள், படைப் பணியாளர்களுக்கான வாக்குகள் மற்றும் விவிபேட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் விதம் மற்றும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளன்று கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்களுக்கு தேர்தல் அதிகாரி எடுத்துரைத்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ராஹூல்நாத்சார் ஆட்சியர் (நாகர்கோவில்) விஷ்ணு சந்திரன், சார் ஆட்சியர் (பத்மநாபபுரம்) ஷரண்யா அறி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகன்யா மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory