» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை கொள்ளை

சனி 18, மே 2019 6:23:32 PM (IST)

பூதப்பாண்டி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த இறச்சகுளம் பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூஜைகள் நடைபெற்ற பின்னர் பூசாரி கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் வழக்கமான பூஜைகளை மேற்கொள்ள பூசாரி கோவிலுக்கு வந்தாராம். அப்போது கோவிலின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி அளித்த புகாரின் பேரில் கோவில் நிர்வாகிகளும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.கோவிலினுள் புகுந்த கொள்ளையர்கள் முத்தாரம்மன், முத்தீஸ்வரர் சன்னதிகளின் பூட்டை உடைத்து சாமி, அம்மன் சிலைகளில் இருந்த 2 ஜோடி கம்மல், ஒரு ஜோடி பொட்டு, மூக்குத்தி உள்பட ஒரு பவுன் தங்க நகைகள் மற்றும் சுமார் 8 வெள்ளி காப்புகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அம்மன் சன்னதி, சாமி சன்னதியில் பூட்டு உடைக்கப்பட்ட இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory