» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் தொழிலதிபர் குடும்பத்துடன் தற்கொலை : போலீஸ் விசாரணை

சனி 18, மே 2019 6:04:05 PM (IST)

நாகர்கோவிலில் கடன் தொல்லை காரணமாக தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகர்கோவில் வடசேரி வஞ்சிமார்த்தாண்டன் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி சிகரெட், பிஸ்கட் உள்ளிட்டவற்றை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் ஏஜன்சி நடத்தி வந்தார். காலை அலுவலகத்தின் சாவியை வாங்க ஊழியர் ஒருவர் சுப்பிரமணி வீட்டுக்குச் சென்றாராம். அவரது வீட்டு கதவை வெகுநேரம் தட்டியும் யாரும் திறக்காததால், அருகிலுள்ள உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். 

அவர்கள் மொட்டை மாடி வழியாக உள்ளே சென்று பார்த்தபோது சுப்பிரமணி, அவரது தாய் ருக்மணி, மனைவி ஹேமா ஆகியோர் சடலமாகக் கிடந்துள்ளனர்.அவரது மகள் சிவானி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த வடசேரி காவல்துறையினர் நால்வரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து அவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கான தடயங்கள் அங்கு கைப்பற்றப்பட்டுள்ளது.பங்குச்சந்தை முதலீடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட சுப்பிரமணி, உறவினர்கள், நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் உள்ளிட்ட பலரிடம் 5 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.

தொழிலில் ஏற்பட்ட நட்டம், பங்குச்சந்தை சரிவு உள்ளிட்ட காரணங்களால், கடனை சரியான தேதிக்கு திருப்பிக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டை விற்றாலும் கடனை அடைக்க வாய்ப்பில்லை என்ற சூழல் உருவானதாகக் கூறும் உறவினர்கள், கடன்காரர்களின் நெருக்கடியால் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory