» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருவட்டாறு அருகே மத போதகருக்கு கத்திக்குத்து

சனி 18, மே 2019 2:06:09 PM (IST)

திருவட்டாறு அருகே மதபோதகருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

சுவாமியார்மடம் கவியலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானதாஸ். இவரது மகன் ஜெபசிங் (35) . இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் ஜெபக்கூட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் நடத்தும் கூட்டத்திற்கு அப்பகுதியிலுள்ளவர்கள் சென்று வருவது வழக்கமாம்.  இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அனீஷின் (31) மனைவி கிரிஜாவும் இக்கூட்டத்திற்கு சென்று வருவராம்.  இதனை  அனீஷ் விரும்பவில்லையாம்.  இது தொடர்பாக தனது மனைவியை அவர்  கண்டித்துள்ளார். மேலும் ஜெபக்கூட்டம் நடத்தும் ஞானதாஸ் மற்றும் ஜெபசிங்கிடமும், தனது மனைவியை ஜெபக்கூட்டத்திற்கு அழைக்கக் கூடாது என்று கூறினராம்.  இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில், வியாழக்கிழமை ஜெபசிங் திருவட்டாறு பிலாங்காலவிளை வழியாக சென்ற போது அனீஷ் மற்றும் 4 பேர் சேர்ந்து ஜெபசிங்கை  தடுத்து நிறுத்தி, அவரை தாக்கி கத்தியால் குத்தினராம். இதில் காயமடைந்த ஜெபசிங்கை அப்பகுதியிலுள்ளவர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஞானதாஸ் கொடுத்த புகாரையடுத்து போலீஸார்  வழக்குப் பதிந்து  விசாரித்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் பலத்த மழை: நெல் அறுவடை பாதிப்பு

வியாழன் 17, அக்டோபர் 2019 11:15:10 AM (IST)

குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்

வியாழன் 17, அக்டோபர் 2019 10:18:32 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory