» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஈத்தாமொழி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு

சனி 18, மே 2019 1:13:30 PM (IST)

ஈத்தாமொழி அருகே மூதாட்டியிடம் சுமார் ஐந்தரை பவுன் நகையை மர்மநபர் பறித்து சென்று விட்டார். 

குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புத்தன்துறை பகுதியை சேர்ந்தவர் ஆதிலிங்கம். கூலி தொழிலாளி. இவரது மனைவி காசிதங்கம் ( 60). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று உறவினர் திருமணத்திற்காக அவர் சென்றிருந்தார். வீட்டில் காசித் தங்கமும், ஆதிலிங்கமும் இருந்தனர். இரவு காசித்தங்கம் வீட்டிற்கு பின்னால் மாட்டிற்கு தீவனம் வைப்பதற்காக சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த மர்மநபர் ஒருவர் காசித்தங்கத்தின் வாயை பொத்தினார். பின்னர் கழுத்தில் கிடந்த சுமார் ஐந்தரை பவுன் நகையை பறித்துவிட்டு தப்பியோடினார்.

திருடன், திருடன் என காசிதங்கம் கூச்சலிட்டார். மனைவியின் சத்தம் கேட்டு ஆதிலிங்கம் அங்கு வந்தார். அக்கம், பக்கத்தினரும் ஓடி வந்தனர். அதற்குள் மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் என கூறப்படுகிறது.இதுகுறித்து காசித்தங்கம் ஈத்தாமொழி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் பலத்த மழை: நெல் அறுவடை பாதிப்பு

வியாழன் 17, அக்டோபர் 2019 11:15:10 AM (IST)

குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்

வியாழன் 17, அக்டோபர் 2019 10:18:32 AM (IST)

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory