» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருவனந்தபுரத்தில் குமரி வாலிபர்களை வழிமறித்து நகை பறிப்பு

வியாழன் 16, மே 2019 1:54:28 PM (IST)

திருவனந்தபுரத்தில் கன்னியாகுமரி வாலிபர்களை வழிமறித்து நகை, செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் குலசேகரத்தை சேர்ந்தவர்கள் அனீஷ். இவரது நண்பர் அபிஷேக். இருவரும் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு பணி முடிந்து திருவனந்தபுரத்தில் இருந்து காரில் குலசேகரத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர். திருவல்லம் அருகே வண்டித்தடம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது சாலையோரம் ஒரு இளம்பெண் நின்று கொண்டிருந்தார். காரை பார்த்ததும் நிறுத்துமாறு அந்த இளம்பெண் சைகை செய்துள்ளார். இதனால் அவர்கள் காரை நிறுத்தினர். அப்போது அந்த பெண் காரின் அருகில் வந்து, அனீஷ்குமார் மற்றும் அபிஷேக்கிடம் ஓட்டல் சென்று ஜாலியாக இருக்கலாம் என பேசியுள்ளார்.

இந்த வேளையில் அங்கு பைக்கில் 2 பேர் வந்துள்ளனர். அவர்கள், இரவில் தனியாக நிற்கும் பெண்ணிடம் தகராறு செய்கிறீர்களா? என்று கேட்டு அனீஷ்குமார், அபிஷேக்கை மிரட்டி தாக்கி உள்ளனர்.  அனீஷ்குமாரின் கழுத்தில் கிடந்த தங்க செயின், விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து திருவல்லம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து அனீஷ்குமார், அபிஷேக் ஆகியோரிடம் விசாரித்தனர். அடுத்தடுத்து நடந்த தீவிர விசாரணையில் 4 பேர் கொண்ட கும்பல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் திருவனந்தபுரம் அருகே கடைக்காவூர் பகுதியை சேர்ந்த உஷா (42), பருத்திக்குழியை சேர்ந்த முகமது ஜிஜாத் (30) ஆகியோரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory