» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

படகிலிருந்து தவறி கடலில் விழுந்த மீனவர் மாயம்

வியாழன் 16, மே 2019 1:37:13 PM (IST)

குளச்சல் அருகே மீன்பிடித்தபோது படகிலிருந்து தவறி கடலில் விழுந்த மீனவரைத் தேடும் பணி 2ஆவது நாளாக நடைபெற்றது.

கன்னியாகுமரி, அஞ்சுக்கூட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் சகாய வில்சன் (43). இவர் சென்ற திங்கள்கிழமை குளச்சல் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் 14 பேருடன் மீன்பிடிக்கச் சென்றார். குளச்சல் மணக்குடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,  இவர் படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார். சக மீனவர்கள் அவரைத் தேடினர். 

ஆனால், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து குளச்சல் கடலோரப் பாதுகாப்பு காவல் துறைக்கும், சகாய வில்சனின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  கடலோரப் பாதுகாப்பு காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை தேடும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், 2ஆவது நாளாக  தேடும் பணி தொடர்ந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory