» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

இந்திய கடற்படை கப்பல் கன்னியாகுமரியில் தீவிர ரோந்து

வியாழன் 16, மே 2019 1:20:13 PM (IST)

இந்திய கடற்படை கப்பல் கன்னியாகுமரியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது.

இலங்கையில் சமீபத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். இதனால் இலங்கையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான கப்பல் கண்காணிப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. 

அந்த கப்பல் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய கடற்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தின் அருகே இந்திய கடற்படை கப்பல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. அதனை கடற்கரையில் நின்ற சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory