» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பிளஸ்-1 சேர்க்கையை முடித்து விட்டு திரும்பிய போது விபத்து: மனைவி- மகள் சாவு

வியாழன் 16, மே 2019 12:38:52 PM (IST)

பிளஸ்-1 சேர்க்கையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது நடந்த விபத்தில் மனைவி- மகள் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர். 

நாகர்கோவிலை அடுத்த மேலசங்கரன்குழி சாந்தபுரத்தைச் சேர்ந்தவர் நாககிருஷ்ணமணி (49). இவர் நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுதா (42). இவர்களது மகள் ஸ்ரீபத்மபிரியா (16). இவரை பிளஸ்-1 வகுப்பில் சேர்ப்பதற்காக கணவன்- மனைவி இருவரும் ஸ்ரீபத்மபிரியாவை அழைத்துக் கொண்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு பள்ளிக்கு மோட்டார்பைக்கில் வந்தனர். பள்ளியில் சேர்க்கை முடிந்ததும் அதே பைக்கில் அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர்.

பைக்கை நாககிருஷ்ணமணி ஓட்டினார். அவருக்கு பின்னால் மகள் ஸ்ரீபத்மபிரியா மற்றும் மனைவி சுதா ஆகியோர் அமர்ந்திருந்தனர். அவர்கள் கேப் ரோட்டில் கணேசபுரம் திருப்பம் அருகில் சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு லாட்ஜ் முன்னால் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரின் டிரைவர் திடீரென்று கார் கதவை திறந்ததாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத நாககிருஷ்ணமணி பைக்குடன் கார் கதவில் மோதினார். இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ஸ்ரீபத்ம பிரியாவும், சுதாவும் நடுரோட்டில் விழுந்தனர். நாககிருஷ்ணசாமி சாலையோரத்தில் விழுந்தார். 

அந்த வழியாக பறக்கை நோக்கி சென்ற மினி பஸ் ரோட்டில் விழுந்து கிடந்த தாய் மற்றும் மகள் மீது ஏறி இறங்கியதில் தலை மற்றும் உடல் நசுங்கிய ஸ்ரீபத்மபிரியாவும், சுதாவும் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தனர். நாககிருஷ்ணமணி கீழே விழுந்ததில் இடதுகால் தொடைப்பகுதியில் பலத்த காயம் அடைந்தார். கண் இமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்து முடிந்தது. படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுதா, ஸ்ரீபத்மபிரியா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். நாககிருஷ்ணமணி  சிகிச்சை பெற்று வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory