» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு கத்திக் குத்து: 2 பேர் கைது

வியாழன் 16, மே 2019 11:53:58 AM (IST)

நாகர்கோவிலில் அரசுப் பேருந்து ஓட்டுநரை கத்தியால் குத்தியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். 

நாகர்கோவில்,கோட்டாறு  புத்தன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரவிகுமார் (46). அரசுப் பேருந்து ஓட்டுநராக உள்ளார்.  இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் (28), மற்றும் ஜெயக்குமார்(22) ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு ரவிகுமார், புத்தன்குடியிருப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சதீஷ், ஜெயக்குமார் ஆகிய இருவரும் வழிமறித்து, ரவிகுமாரிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினராம். இதில்,  பலத்த காயமடைந்த ரவிகுமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து  கோட்டாறு போலீஸார்  வழக்குப்  பதிந்து  சதீஷ், ஜெயக்குமார் ஆகிய இருவரையும்  கைது  செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory