» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பள்ளி வாகனங்களுக்கு ஜூன் 2 ம் தேதிக்குள் தகுதிச்சான்று: ஆர்.டி.ஓ. அறிவுறுத்தல்

வியாழன் 16, மே 2019 11:33:46 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஜூன் மாதம் 2  ஆம் தேதிக்குள் தகுதிச் சான்று பெற வேண்டும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு அங்குள்ள எஸ்எல்பி பள்ளி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 260  வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

வாகனங்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல் முருகன், நாகர்கோவில் காவல் உதவிக் கண்காணிப்பாளர் ஜவகர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், பத்மபிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில், வாகன தகுதிச்சான்று சரியாக உள்ளதா, தரைதளப்பகுதி சரியாக இருக்கிறதா, அவசர வழி கதவு செயல்படுகிறதா, முதல் உதவி உபகரணங்கள்-  தீயணைப்பு கருவிகள் உள்ளனவா, பேருந்து ஓட்டுநர் பள்ளி வாகனம்ஓட்ட தகுதியானவரா ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

இதில் 25  வாகனங்கள் பல்வேறு குறைபாடுகள் காரணமாக தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. இந்த வாகனங்களையும், ஆய்வு வராத எஞ்சிய வாகனங்களையும்  குறைபாடுகளை நீக்கி,  வரும் ஜூன் 2 ஆம் தேதிக்குள் தோவாளையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வந்து ஆய்வுக்கு உட்படுத்தி தகுதிச் சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்  என்று வட்டாரப் போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory