» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருவள்ளுவர் சிலைக்கு தமிழறிஞர்கள் மலர் தூவி மரியாதை

வியாழன் 16, மே 2019 11:06:22 AM (IST)

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் தமிழறிஞர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் பிறந்த 2050 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி, கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு தனிப்படகில் சென்ற தமிழறிஞர்கள், திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர், திருவள்ளுவர் சிலை வளாகத்தில் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தன்  கூறியது: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும். இதற்காக, மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory