» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மார்த்தாண்டத்தில் 792 பள்ளி வாகனங்கள் ஆய்வு

புதன் 15, மே 2019 6:37:50 PM (IST)

மார்த்தாண்டத்தில் 782 பள்ளி வாகனங்கள் போக்குவரத்து துறை மற்றும் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு நேற்று எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. அப்போது வாகன தகுதிச்சான்று மற்றும் ஆவணங்கள் சரியாக உள்ளனவா? வாகனங்களின் தரைதளப்பகுதி சரியாக இருக்கிறதா? அவசர வழி கதவு செயல்படுகிறதா? முதலுதவி உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள் போன்றவை உள்ளனவா? டிரைவருக்கு உரிய தகுதிகள் உள்ளதா? அவருடைய ஓட்டுனர் லைசென்ஸ் போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அனைத்தும் சரியாக இருந்த வாகனங் களுக்கு ஆய்வு செய்யப்பட்டதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

அது போல் இன்று மார்த்தாண்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 192 பள்ளிகளை சேர்ந்த 792 வாகனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டு அவை இன்று சோதனையிடப்பட்டது. இந்த ஆய்வில் பத்மநாபபுரம் சார்ஆட்சியர் சரண்யா ஹரி , வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து காெண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory