» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கமல்ஹாசன் உருவபொம்மை எரிப்பு 51 பேர் மீது வழக்கு

புதன் 15, மே 2019 1:14:06 PM (IST)

வடசேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 51 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், இந்து மதம் தொடர்பாக பேசிய கருத்திற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாகர்கோவில் வடசேரியில் இந்து முன்னணி கட்சியினர் கமல்ஹாசனின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக வடசேரி போலீசார் இந்து முன்னணியைச் சேர்ந்த சோமன், பாஜக கட்சி மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் உள்பட 51 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory