» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மனைவியை வெட்டி கொல்ல முயன்ற ரவுடி கைது

புதன் 15, மே 2019 1:00:32 PM (IST)

சுசீந்திரம் அருகே மனைவியை வெட்டி கொல்ல முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டார். 

நெல்லை மாவட்டம் சுசீந்திரம் அருகே செங்கட்டி பாலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் ( 44). பிரபல ரவுடியான இவர் மீது சுசீந்திரம் காவல்நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருடைய மனைவி ஜெயா (43). இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் இரவு வீட்டில் கிருஷ்ணன்–ஜெயா இடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது, ஆத்திரமடைந்த கிருஷ்ணன் அரிவாளால் ஜெயாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஜெயா ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். 

அதன்பிறகு அவர்கள் ஜெயாவை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், கிருஷ்ணன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory