» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

25 பள்ளி வாகனங்களை இயக்க அனுமதி ரத்து : நாகர்கோவிலில் நடந்த ஆய்வில் நடவடிக்கை

புதன் 15, மே 2019 12:09:55 PM (IST)

நாகர்கோவிலில் நடந்த ஆய்வில் 25 பள்ளி வாகனங்களை இயக்க அனுமதி ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு நேற்று எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. அப்போது 96 பள்ளிகளை சேர்ந்த சுமார் 350 வாகனங்களை ஆய்வுக்கு அனுப்புமாறு பள்ளி நிர்வாகத்தினருக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் 260 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டன.அவற்றை மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி செந்திவேல் முருகன், உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது வாகன தகுதிச்சான்று மற்றும் ஆவணங்கள் சரியாக உள்ளனவா? வாகனங்களின் தரைதளப்பகுதி சரியாக இருக்கிறதா? அவசர வழி கதவு செயல்படுகிறதா? முதலுதவி உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள் போன்றவை உள்ளனவா? டிரைவருக்கு உரிய தகுதிகள் உள்ளதா? அவருடைய ஓட்டுனர் லைசென்ஸ் போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அனைத்தும் சரியாக இருந்த வாகனங்களுக்கு ஆய்வு செய்யப்பட்டதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

ஆய்வின்போது குறைபாடுகள் இருந்த வாகனங்களின் தகுதிச்சான்றுகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக தரைதளம் சேதம் அடைந்திருந்த வாகனங்கள், அவசர வழிக்கதவு திறக்கமுடியாத நிலையில் இருந்தவை, டிரைவர் கேபின் அமைக்கப்படாதவை, தீயணைப்பு கருவிகள் இல்லாமல் இருந்தது, தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தவை போன்ற பல்வேறு காரணங்களுக்காக 25 பள்ளி வாகனங்களை இயக்க அனுமதியை அதாவது தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. அந்த வாகனங்கள் 7 நாட்களுக்குள் குறைபாடுகளை சரிசெய்து காண்பிக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர். இன்றும் ஆய்வு நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory