» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ராஜீவ்காந்தி வழக்கில் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் : பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

புதன் 15, மே 2019 11:22:05 AM (IST)

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தினார்.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறும் போது,குமரி மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு இந்தத் தேர்தலில் வாக்குரிமை இல்லாமல் போய்விட்டது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை உலகத்தில் உள்ள பல நாடுகள் கண்டித்திருக்கின்றன. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்திய அரசு எடுத்து அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கு, தடா சட்டத்தின்கீழ் தொடுக்கப்பட்ட வழக்காகும். 

இவ்வழக்கை தடா நீதிமன்றம் ரகசியமாக விசாரித்தது. வழக்கில் எஞ்சிய 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என அதிமுக அரசு 2018இல் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆனால் கடந்த 9 மாதகாலமாக ஆளுநர் முடிவெடுக்காமல் உள்ளார். இதற்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாக காரணம் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 7 பேருக்கும் இருந்த தடையை நீக்கிவிட்டது. எனவே, தமிழக அரசு உடனடியாக 7 பேரையும் விடுவிக்க வேண்டும். மேலும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றார் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory