» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருவட்டார் அருகே கல்லூரி மாணவி மாயம்

செவ்வாய் 14, மே 2019 8:42:28 PM (IST)

திருவட்டார் அருகே கல்லூரி மாணவி மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பகுதியை அடுத்த கீரிவிளை பகுதியை சேர்ந்தவர் சற்குணம் என்பவரது மகள் திருபா (22). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார். அவரது திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந் நிலையில் கடந்த 10ம் தேதி கல்லூரி செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவி மாலையில் வீடு திரும்பவில்லையாம். அவரை தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory