» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மார்த்தாண்டம் பாலம் உடைந்தது என்பது வதந்தி : சர்ச்சைக்கு அதிகாரி விளக்கம்

வெள்ளி 26, ஏப்ரல் 2019 12:03:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளதாகச் சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். அதை பொதுமக்கள் நம்பவேண்டாம் எனத் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மார்த்தாண்டத்தில் சுமார் 179 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளத்துக்கு இரும்பு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்டது. இந்த நிலையில், மார்த்தாண்டம் மேம்பாலத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துவிட்டதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டது. இதுகுறித்து மார்த்தாண்டம் மேம்பால பகுதியில் நேரில் சென்று விசாரணை நடத்தினோம். மார்த்தாண்டம் மேம்பாலம் ஒய் வடிவில் பிரியும் பகுதிக்கு அருகே பாலத்தின் அடிப்பகுதியில் வாட்டர் புரூப் ஷீட் உடைந்து விழுந்திருந்தது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையில் மேம்பாலப் பணிகளைக் கவனித்து வரும் பொறியாளர் கூறும் போது மேம்பாலம் கான்கிரீட் அமைக்கப் பலகைகள் பயன்படுத்த வேண்டும். அது காலதாமதத்தை ஏற்படுத்தும் என்பதால், வாட்டர் புரூப் தகர ஷீட்களைப் பயன்படுத்தி கான்கிரீட் போட்டுள்ளோம். 

அந்த தகர ஷீட் ஒன்று ஏற்கெனவே கழன்று நின்றது. அதை அகற்றும்படி ஊழியர்களிடம் கூறியிருந்தோம். அவர்கள் அதை அகற்றாமல் வைத்திருந்தனர். அந்த ஷீட் கழன்று விழுந்ததை மேம்பாலம் உடைந்து விட்டதாகச் சிலர் தவறான தகவல் பரப்புகிறார்கள். மார்த்தாண்டம் மேம்பாலம் பலமாக இருக்கிறது வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory