» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கடல் சீற்றம் கடலோர கிராமங்களில் கடும் பாதிப்பு

வெள்ளி 26, ஏப்ரல் 2019 10:47:21 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக கடலோர கிராமங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மேற்கு கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வரும் நிலையில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்தது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருக்கிறது.இந்நிலையில் கன்னியாகுமரி மேற்கு கடற்கரை கிராமங்களான நீரோடி, மார்த்தாண்டம்துறை, அழிக்கால், குளச்சல், கடியப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகிறது. சுமார் பத்தடி உயரம் வரை கடல் அலைகள் எழுந்தன. 

வள்ளவிளையில் கடற்கரையை ஒட்டியுள்ள வீடுகளுக்கும் கடல் நீர் புகுந்தது. 50க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்துள்ளது. குளச்சல் சுற்றுவட்டாரத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் 500க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கரையிலேயே நிறுத்திப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory