» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேஸ்புக் நண்பர் திருமணத்திற்கு வந்தவர்கள் பலி

வியாழன் 25, ஏப்ரல் 2019 8:39:35 PM (IST)

குளச்சல் அருகே பேஸ்புக் நண்பர் திருமணத்திற்கு வந்த இடத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே இணையம் புத்தன்துறையைச் சேர்ந்தவர் வினோபின் ராஜ் (வயது 30). ஓமன் நாட்டில் வெல்டராக வேலைபார்த்து வருகிறார். இவரது திருமணம் நேற்று இணையம் புத்தன் துறை கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்தது. திருமண விழாவிற்கு அவரது  பேஸ்புக் நண்பர்களான திருப்பூர் ஆத்துகிணத்துப்பட்டி சங்கீதா (24), சேலம் ராமலிங்கம் காலணி சங்கராலயம் ரோட்டையைச் சேர்ந்த மோகன் (33) மற்றும் பலரும் வந்திருந்தார்களாம்.

வினோபின் ராஜின் திருமணம் முடிந்த பிறகு அவர்கள் அங்குள்ள கடற்கரைக்கு சென்றனர்.கடற்கரையில் நின்று கொண்டு சங்கீதா, மோகன் உள்பட நண்பர்கள் கால் நனைத்துக் கொண்டிருந்தனர். அப்போது சங்கீதாவின் கண்ணாடி கடலில் விழுந்தது. இதை மோகனும், சங்கீதாவும் தேடினார்கள். அப்போது வந்த ராட்சத அலை ஒன்று இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் கூச்சலிட்டனர். பின்னர் கடல் அலையில் சிக்கிய சங்கீதாவை மீட்டனர். மோகனை அலை உள்ளே இழுத்துச் சென்று விட்டது. அவரை தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

மீட்கப்பட்ட சங்கீதாவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சங்கீதா பலியானது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  நள்ளிரவில் சங்கீதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். 

பலியான சங்கீதா அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.கடல் அலை இழுத்துச் சென்ற மோகனை தேடும் பணி இன்றும் நடந்தது. மோகன் இழுத்துச் சென்ற பகுதியில் இருந்து ஒரு நாட்டிங்கல் தொலைவில் அவர் பிணமாக மிதப்பதை பார்த்த மீனவர்கள் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மீனவர்கள் உதவியுடன் மோகனின் உடலும் மீட்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory