» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

துறைமுகத்தால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் போராடுவேன் : இயக்குனர் பேரரசு

வியாழன் 25, ஏப்ரல் 2019 5:50:41 PM (IST)

கன்னியாகுமரியில் துறைமுகம் அமைவதால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் போராடுவேன் என இயக்குனர் பேரரசு தெரிவித்தார்.

நடிகர் விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி, அஜித்குமார் நடித்த திருப்பதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு. இவர் இன்று கன்னியாகுமரி வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வரும் ஜூன் மாதம் மேலும் 2 அல்லது 3 படங்களை இயக்க உள்ளேன்.ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க விருப்பம் உள்ளது. அந்த லட்சியம் விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்.ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். 

அவர் மக்கள் சேவைக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்ற வேண்டும்.பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் துணிச்சலை பாராட்டுகிறேன்.நானும் மக்கள் பிரச்சனைகளுக்காக நடந்த போராட்டங்களில் பங்கெடுத்து உள்ளேன். ஜல்லிக்கட்டு, விவசாயிகள் பிரச்சனைக்காக போராடியுள்ளேன். மீனவர்கள் பிரச்சனைக்காகவும் போராடுவேன்.கன்னியாகுமரியில் துறைமுகம் அமைவதால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்காகவும் போராடுவேன்.

தமிழ்நாட்டில் யார் அதிக பணம் கொடுத்தார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இந்த வெற்றி உண்மையான வெற்றியாக இருக்காது. எனக்கு அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை. நான் அரசியலுக்கு வரும்போது, அப்போது எந்த கட்சி நல்ல கட்சியாக எனக்கு தோன்றுகிறதோ, அந்த கட்சியில் சேர்ந்து பணியாற்றுவேன்.இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு குறித்து சில நாடுகள் மட்டுமே கண்டனம் தெரிவித்து உள்ளன. இதனை உலக நாடுகள் அனைத்தும் கண்டிக்க வேண்டும். தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தல் முறையாக நடக்கவில்லை. பலரது வாக்குரிமை மறுக்கப்பட்டு உள்ளது.பெரும்பாலானவர்களுக்கு பூத் சிலிப் கூட வழங்கப்படவில்லை. இதில் தேர்தல் ஆணையம் முறையாக நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory