» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாறாதீர்கள் : பெண்களுக்கு கன்னியாகுமரி எஸ்பி.,அறிவுரை

வியாழன் 25, ஏப்ரல் 2019 1:34:51 PM (IST)

பெண்கள் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி., ஸ்ரீநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைக் காலமாக செல்போன்கள் மூலம்  மிஸ்டு கால்கள், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் போன்றவற்றின் மூலம் முன்பின் தெரியாதவர்களை மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் அதிக அளவில் நம்பி ஏமாறுவது பற்றியும், பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுவது தொடர்பாகவும் புகார்கள் அதிக அளவில் வருகின்றன. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் செல்போன்களை தகவல் தொடர்புக்காக மட்டுமே பயன்படுத்தலாம்.  

தெரியாத நபர்களிடம் மாணவிகள் நட்பை ஏற்படுத்தி கொள்ளக் கூடாது,  பெண்கள் தங்கள் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை  தவிர்க்க வேண்டும்.  மேலும் மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் எங்கு சென்றாலும் தங்கள் பெற்றோர்களுடன்  வெளியே செல்ல வேண்டும்.  பெற்றோருக்கு தெரியாமல் தனியாக சென்று ஆண் நண்பர்களை சந்திப்பதையும்,  அவர்களுடன் வெளியே செல்வதையும் தவிர்க்க வேண்டும்  என்று அதில் குறிப்பிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory