» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் சூறைக் காற்றுடன் மழை: வாழைகள் சேதம்

புதன் 24, ஏப்ரல் 2019 11:54:30 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில்  கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருவட்டாறு, குலசேகரம், அருமனை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை சூறைக்காற்றுடன் மழை பெய்தது. 

இதில், அருமனை அருகேயுள்ள தெற்றிவிளை, நல்லூர்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் வீசிய சூறைக் காற்றால் நல்லூர்கோணம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார், சுரேஷ் ஆகியோருக்குச் சொந்தமான 500-க்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழைகள் சாய்ந்தன. இதைத் தொடர்ந்து, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் அப்பகுதியை பார்வையிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory