» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கல்லூரி மாணவியை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் : விபரீதமான பேஸ்புக் பழக்கம்

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 8:09:42 PM (IST)

நாகர்கோவில் கல்லூரி மாணவியை காரில் கடத்தி சென்று  பாலியல் பலாத்காரம் தனது நண்பருக்கும் விருந்தாக்கிய காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அந்த மாணவி பேஸ்புக்கில் தனது தோழிகளுடன் தொடர்பில் உள்ளதால் அதன் மூலம் அவருக்கு ஆண்களும் பழக்கமானார்களாம். அப்போது அஞ்சுகிராமம் அருகே உள்ள ஆவரைகுளம் பகுதியை சேர்ந்த ஏசுநேசன் என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.  மாற்றுத்திறனாளியான அந்த வாலிபர் முதலில் நாகர்கோவில் மாணவியிடம் நட்பு முறையில் கருத்துக்களை பரிமாறி வந்தார். பிறகு நாட்கள் செல்லச் செல்ல அந்த மாணவியை தான் காதலிப்பதாக கூறியதாக தெரிகிறது.

அந்த வாலிபர், மாணவியிடம் அவரை நேரில் சந்தித்து பேச விரும்புவதாக கூறினார். அந்த மாணவியும் அதற்கு சம்மதம் தெரிவித்ததால் ஏசுநேசன் தனது காரில் வெள்ளமடம் பகுதிக்கு வந்தார். பிறகு செல்போன் மூலம் அந்த மாணவிக்கு தகவல் கொடுத்து வெள்ள மடத்திற்கு வரவழைத்தார். மாணவி அங்கு வந்ததும் அவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு ஆவரைகுளம் நோக்கி புறப்பட்டார்.அந்த காரில் ஏசுநேசனுடன் வாலிபர் ஒருவரும் இருந்ததால் சந்தேகம் அடைந்த மாணவி அந்த வாலிபர் பற்றி ஏசுநேசனிடம் கேட்டார். அதற்கு அவர் தனது நண்பர் ஆதிஸ் என்றும் தனக்கு துணையாக வந்துள்ளதாகவும் கூறி மாணவியை சமாதானப்படுத்தினார்.

பிறகு அந்த மாணவியை காரில் அழைத்துக் கொண்டு ஆவரைகுளத்திற்கு ஏசு நேசன் சென்றார். அங்கு வைத்து அந்த மாணவியை ஏசுநேசன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அவரது நண்பரும் மாணவியை சீரழித்துள்ளார். தனது காரில் அந்த மாணவியை ஏற்றிக் கொண்டு மீண்டும் அவரது ஊரில் கொண்டு சென்று விட்டுவிட்டு ஏசுநேசன் சென்றுவிட்டார். 

பாதிக்கப்பட்ட அந்த மாணவி நடந்த விவரங்களை தனது வீட்டாரிடம் கூறி அழுதார். பிறகு தனக்கு நடந்த கொடுமை பற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு ஏசுநேசன், ஆதீஸ் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory