» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு

செவ்வாய் 23, ஏப்ரல் 2019 5:40:40 PM (IST)

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த ஞாயிறன்று தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தது. தீவிரவாதிகள் நடத்திய இந்த பயங்கர தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து இலங்கையையொட்டி உள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவும் அபாயம் இருப்பதாலும், அவர்களால் தமிழகத்திலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற முன் எச்சரிக்கை காரணமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் கூடன்குளம் அணுமின்நிலைய பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory