» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நித்திரவிளை அருகே இளம்பெண் மீது தாக்கு : முதியவர் மீது வழக்குப்பதிவு

திங்கள் 15, ஏப்ரல் 2019 6:30:58 PM (IST)

நித்திரவிளை அருகே இளம்பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து முதியவர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை சேர்ந்தவர் தங்கச்சி என்பவரது மனைவி பிந்து (19). இவர் பெண்கள் சங்கத்தின் செயலாளராக உள்ளார். இந்த சர்ச்சில் பெண்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடந்ததால் அதில் சமையல் செய்யும் பொருட்களுடன் அதற்கு முன் தினம் மாலை பிந்து வந்தார் அப்போது அங்கு செயலராக இருந்த செல்லப்பன்  நின்றுள்ளார்.  பிந்து மற்றும் அவருடன் வந்தவர்கள் சமையலுக்கு ஆயத்தமாக வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் போது தன்னிடம் கேட்காமல் இங்கு எதுவுமே செய்யக்கூடாது என செல்லப்பன் கூறி பிந்து கையில் துடைப்பத்தை பறித்து அதன் கைப்பிடியால் முகத்தில் தாக்கியதில் பிந்து காயம் அடைந்தார். 

தொடர்ந்து அவர் குழித்துறை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெறுகிறார். இது சம்பந்தமாக அவர் நித்திரவிளை போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

மகாராஜாApr 16, 2019 - 01:06:15 PM | Posted IP 103.1*****

தங்கச்சி மனைவி (பிந்து ) பூரண குணம் அடைய வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் பலத்த மழை: நெல் அறுவடை பாதிப்பு

வியாழன் 17, அக்டோபர் 2019 11:15:10 AM (IST)

குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்

வியாழன் 17, அக்டோபர் 2019 10:18:32 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory