» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஸ்டாலினுக்கு மட்டும் தான் ராகுல் பிரதமர் வேட்பாளர் : சரத்குமார் பிரச்சாரம்

திங்கள் 15, ஏப்ரல் 2019 6:00:46 PM (IST)

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என மு.க. ஸ்டாலின் மட்டும் தான் சொல்லி வருகிறார் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறினார். 

கன்னியாகுமரி  தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனை ஆதரித்து வடசேரியில் தேர்தல் பிரசாரம் செய்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசியதாவது:- திமுக தலைவர் ஸ்டாலினும், காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டணியை பார்த்து சந்தர்ப்பவாத கூட்டணி என கூறுகிறார்கள். வலுவான, நிலையான ஆட்சி வரவேண்டும் என்றால் சேர்ந்து தான் ஆக வேண்டும்.ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என மு.க. ஸ்டாலின் மட்டும் சொல்லி வருகிறார். கூட்டணியில் உள்ள வேறு எந்த தலைவரும் ஏற்று கொள்ளவில்லை.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு சீனா, பாகிஸ்தான், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருந்தது. அந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஒரே பிரதமர் மோடி தான்.மத்தியில், மாநிலத்தில் ஆட்சியை பற்றி குறை சொல்ல முடியாமல் தனி நபர் விமர்சனம் செய்து வருகின்றனர். மத்தியில் நிலையான ஆட்சி, வலிமையான ஆட்சி வரவேண்டும் என்றால் பொன். ராதாகிருஷ்ணனை ஓட்டு போட்டு வெற்றிபெற செய்ய வேண்டும்.இவ்வாறு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory