» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பணக்காரர்களின் நண்பராக பிரதமராக மோடி உள்ளார் : நடிகை குஷ்பு தாக்கு

திங்கள் 15, ஏப்ரல் 2019 12:22:59 PM (IST)

பணக்காரர்களுக்கு மட்டும்தான் மோடி பிரதமராக உள்ளார் என்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகை குஷ்பு தெரிவித்தார். 

கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து நேற்று குமரி மாவட்டத்தில் நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். அவர் மாவட்டத்தின் சுசீந்திரம், கொட்டாரம், நாகர்கோவில் ராமன் புதூர் உள்பட 15 இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று அவர் பேசியதாவது, பிரதமர் மோடி உங்கள் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்னாரே அதை அவர் செய்தாரா? 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக சொன்னாரே வேலை கிடைத்ததா? ஆனால் பாஜக ஆட்சியில் 2 கோடி பேர் வேலை இழந்து உள்ளனர்.

பிரதமர் மோடி பணக்கார நண்பர்களுக்கு மட்டும்தான் பிரதமராக உள்ளார். இந்த ஆட்சியில் விலைவாசி எந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.காங்கிரஸ் ஆட்சியின் போது 450 ரூபாயாக இருந்த கியாஸ் விலை இன்று 950 ரூபாய் அளவிற்கு உயர்ந்து விட்டது. கேபிள் டி.வி. கட்டணம் 150 ரூபாயில் இருந்து 350 ரூபாய் ஆகி விட்டது. அதிக பணம் கொடுத்தால் தான் எல்லா சேனல்களையும் பார்க்க முடியும். நீங்கள் விரும்பும் சேனல்களைக்கூட உங்களால் பார்க்க முடியாது.

இதற்கு எல்லாம் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்தான் முடியும். இளம் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் ஆகும் போதுதான் எல்லா மாற்றத்தையும் கொண்டுவர முடியும். அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். அவரது கனவை நினைவாக்க வேண்டும்.இவ்வாறு குஷ்பு பேசினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory