» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ராகுல் பிரதமரானால் விழித்துள்ள மக்கள் தூங்கி விடுவர் : பொன்.ராதாகிருஷ்ணன்

திங்கள் 15, ஏப்ரல் 2019 11:54:01 AM (IST)

காங்கிரஸ் தலைவர் ராகுல் பிரதமர் ஆனால் விழித்துள்ள மக்கள் தூங்கி விடுவார்கள் என கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கட்சி அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில்  பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அவர் பொய் மட்டுமே கூறிவருகிறார். மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று குஷ்பு கூறினார்.இதற்கு பதில் அளிக்கும் வகையில்  கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் மோடி பொய் பேசுவதாக கூறும் குஷ்பு, சமீபத்தில் அவரிடம் தவறு செய்தவர் யார் என்பதை இதுவரை வெளிப்படுத்தவில்லை.பிரதமர் மோடி கன்னியாகுமரி தொகுதி மக்களுக்கு என்ன செய்தார்? என்பது இங்குள்ள வாக்காளர்களுக்கு தெரியும். இம்மாவட்டத்தில் நடந்த வளர்ச்சி திட்டங்கள் அதற்கு பதிலாக அமையும்.ராகுல் காந்தி பிரதமராக வந்தால் தான் மாற்றம் ஏற்படும் என்று குஷ்பு சொல்வது உண்மைதான். அவர் பிரதமர் ஆனால் இப்போது விழித்து இருக்கும் மக்கள் அனைவரும் தூங்கி விடுவார்கள்.

8 வழிச்சாலை திட்டத்தை மக்கள் விரும்பும் போது அதனை யாராலும் தடுக்க முடியாது. இதனை தான் மத்திய மந்திரி பியுஸ்கோயலும் கூறியுள்ளார்.நான் பிரசாரத்திற்கு சென்றபோது கூட தேர்தல் அதிகாரிகள் பல முறை என் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அவர்களுக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

பாலாApr 15, 2019 - 03:18:02 PM | Posted IP 43.24*****

ஆகா பொறி உருண்டை இப்மடன் உண்மையை ஒதுக்கீட்டு இருக்கு.. உங்க ஆட்சியில மக்களை எங்கடா நிம்மதியா தூங்க விட்டீங்க..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory