» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வெப்கேமரா கண்காணிப்பு பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி

திங்கள் 15, ஏப்ரல் 2019 11:17:07 AM (IST)


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1307 பதட்டமான கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கான வெப் கேமரா கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கான பயிற்சிக்கு வகுப்பினை தொடங்கி வைத்து ஆலோசனைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கினார்.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது- திருநெல்வேலி மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் என 511 வாக்குச்சாவடிகளும், 796 பதற்றமாக கண்டறியப்பட்ட வாக்கச்சாவடிகளும் என 1307 உள்ளது வாக்குச்சாவடிக்கு வெப் கேமரா கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் முதலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தேர்தல் பணிகளில் ஈடுபடும்; மாணவர்கள்  தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடிகளின் அருகில் தங்களது வாக்கு செலுத்தும் பகுதி இருந்தால் மட்டும் சென்று வாக்களிக்க வேண்டும்.  அல்லது தங்களது வாக்கினை செலுத்த  பார்ம் 12 பூர்த்தி செய்து பணிபுரியும் வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலுத்த வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் கவனமுடன் மற்றும் எந்த பாரபட்சமின்றி நடுநிலையாக செயல்பட வேண்டும். வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் மாலையில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். தேர்தல்; நாளன்று உஉ வஎ கேமராவின் மூலம் மாவட்டத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையர் என தேர்தல் பணியில் ஈடுபடம் அனைவரும் பார்வையிடுவர்கள் எனவே எவ்வித குறைபாடு அல்லது உபகரனங்கள் குறைபாடுமின்றி தங்கு தடையில்லாமல் பணிகள் மேற்கொள்ள வேண்டும். 

இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி வாக்குச்சாவடிகளில் பொருத்திய வெப் கேமராக்கள் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் கடைசி நபர் வாக்களித்து சென்று வாக்குப்பதிவு இயந்திரம் முத்திரையிடப்பட்டு மூடியவுடன் மட்டும் இணையதள கண்காணிப்பு உஉ வஎ  கேமராவினை இணைப்பினை துண்டிக்க வேண்டும். பதிவு செய்த மெமரி கார்டினை வாக்கச்சாவடி அலுவலரிடம் ஒப்படைத்த பின்னர் வாக்குச்சாவடியை விட்டு வெளியே செல்ல வேண்டும். மாணவர்கள் கவனமுடன் வாக்குச்சாவடி அலுவலர்களுடன் ஒருங்கினைந்து செயல்பட வேண்டும். என  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது கணே~;குமார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.செந்தில், மாவட்ட தகவல் இயல் இயக்குநர் திரு.தேவராஜன், கூடுதல் மாவட்ட தகவல் தகவல்இயல் அலுவலர், திரு.ஆறுமுகநயினார், தேர்தல் வட்டாட்சியர் திரு.புகாரி, மற்றும் தகவல் இயல் பெரியார்கள் திரு.கேசவராம், திரு.மணி மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory