» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஜல்லிக்கட்டு போல் மீண்டும் ஒரு போராட்டம் நடக்கும் : கமல்ஹாசன் எச்சரிக்கை

திங்கள் 15, ஏப்ரல் 2019 11:04:48 AM (IST)

ஜல்லிக்கட்டு போல் மீண்டும் ஒரு போராட்டம் நடக்கும் அதில் நான் கட்டாயம் இருப்பேன் என நாகர்கோவிலில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

நாகர்கோவிலில் நடந்த மக்கள் நீதி மய்யத்தின் பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், கன்னியாகுமரி வேட்பாளர் எபினேசரை ஜல்லிக்கட்டுப் போராட்டம் முதலே எனக்குத் தெரியும். இங்கும் போராட்டம் தேவைப்படுகிறது. தமிழகத்தில் நேர்மையாளர்கள் பலரும் எஞ்சியிருக்கிறார்கள் என்பதற்கு பேருதாரணம் இந்தக் கூட்டம். இவர்கள் மாற்றத்தின் தலைவர்கள் நான் அவர்களின் தொண்டன்.

மக்களை நோக்கி துப்பாக்கியைத் திருப்பும் தைரியம் இவர்களுக்கு வந்தது என்றால் அதற்கு நாம் மெத்தனமாக இருந்ததுதான் காரணம். கனிம வளம், மண், மக்களை சூறையாடிவிட்டு பணத்தை எங்கே கொண்டுபோவார்கள். ஆஸ்பத்திரியில் கிடக்கும்போது இந்தப் பணம் இவர்களுக்குப் பயன்படாது என்பதை நாம் பார்த்துவிட்டோம். தூத்துக்குடியில் நம்மைச் சுட்டது நாம் அமைத்த அரசு. 

இனி நாம் மெத்தனமாக இருந்தால் என்ன ஆகும் என்பதற்கு இது ஒரு சோற்றுப்பதம். ஜல்லிக்கட்டுப் போராட்டம் போன்று மீண்டும், மீண்டும் போராட்டம் நடக்கும். அதற்கு நான் தலைமை வகிக்கிறேனோ இல்லையோ ஆனால், நான் அங்கு இருப்பேன். வேட்பாளர்கள் முகம் உங்களுக்குப் புதிதாக இருக்கும் என்பதால் என் முகத்தையும் முகவரியையும் நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.

மேற்கு கடற்கரையை எப்படி வளர்த்தோமோ அதுபோல கிழக்கு கடற்கரையையும் மாற்ற வேண்டும். கார் தொழிற்சாலைகள் போன்ற மாசு செய்யாத ஆலைகளை அமைத்து வேலைகளை வழங்க முடியும்.தமிழக மக்கள் கொடுக்கும் உற்சாகமும், நம்பிக்கையும் என்னை இப்படி பேச வைக்கிறது. அவர்கள் குரலாக மாறி நான் பேசிக்கொண்டிருக்கிறேன். 

ஒவ்வோர் இடத்திலும் மேடையிட்ட பிறகு மாற்றச் சொல்வார்கள். ஊருக்குள் வரக்கூடாது, வந்தாலும் பேசக்கூடாது என்பார்கள். இது மக்களின் கட்சி, மக்களின் அரசியல், மக்களின் ஆட்சியாக மாறும். இங்கு பாதுகாப்பு பணி செய்யும் காவல்துறைக்கு நன்றி சொல்கிறேன். திறமையானவர்கள் பலர் இருக்கிறார்கள். சிலரை ஏவல்துறையாக மாற்றியது இந்த அரசு. எனவே, இந்த ஆட்சி மாற்றப்பட வேண்டும் என பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) LtdThoothukudi Business Directory