» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திங்கள் 15, ஏப்ரல் 2019 10:51:58 AM (IST)

கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கு ஆட்சியர் மற்றும் தேர்தல்அதிகாரி முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

2019 பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு  விருப்பம் தெரிவித்து பெயர் பதிவு செய்துள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் தேர்தல் பணியில் புதிதாக இணைய விருப்பமுள்ள 65 வயதிற்கு உட்பட்ட முன்னாள் படை வீரர்கள் அனைவரும் நாளை (16ம் தேதி) மதியம் 1 மணிக்கு முன்னாள்  படைவீரர்கள் அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் நாகர்கோவில், மறவன் குடியிருப்பில் அமைந்துள்ள ஆயுத படை மைதானத்தில் வருகை புரிந்து பணிமுன்பணம் பெறுவதுடன் 16.04.2019 முதல் 19.04.2019 வரை  தேர்தல் பாதுகாப்பு பணியில்  சிவில் உடையில் பணியாற்றிட வேண்டும்.  

மேலும் 4 நாட்களுக்கு தேவையான பொருட்கள் உடன் எடுத்து வரவும் 19.04.2019 அன்று காலை 9மணிக்கு மதிப்பூதிய தொகை பெறுவதற்கு உரிய காவல் ஆய்வாளரிடமிருந்து பணிச் சான்றுடன் மறவன் குடியிருப்பில் அமைந்துள்ள ஆயுத படை மைதானத்தில் மீண்டும் வருகை புரிந்திடுமாறு  கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory