» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வாலிபர் மீது தாக்குதல் : போலீசார் விசாரணை

சனி 23, மார்ச் 2019 6:11:49 PM (IST)

மார்த்தாண்டம் அருகே வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி பகுதியில் சாஸ்தா கோவில் உள்ளது. இங்கே கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவிழா நடந்துள்ளது. அப்போது நடந்த அன்னதானத்தில் ஒரு சிறுவன் ஒழுங்கீனமாக நடந்ததாகவும் அதனை காட்வின் (30) என்பவர் கண்டித்ததாக தெரிகிறது. இது குறித்து அச்சிறுவன் தனது உறவினரான எமல் (32) என்பவரிடம் தெரிவித்தாராம். 

உடனே எமல், காட்வினிடம் இது குறித்து கேட்டதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காட்வின், எமலை சரமாரியாக தாக்கியுள்ளார் சம்பவத்தில் காயமடைந்த எமல் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் காட்வின் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu Communications



Thoothukudi Business Directory