» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் : அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

சனி 23, மார்ச் 2019 1:31:21 PM (IST)

நாடாளுமன்ற தேர்தல் - 2019 தொடர்பான பயிற்சியினை நல்ல முறையில் பயன்படுத்தி சிறப்பாக பணியாற்ற, வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் - 2019 - ஐ முன்னிட்டு, மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி, கருங்கல் பெத்தலகேம் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி, மணவாளக்குறிச்சி பாபுஜி மேல்நிலைப்பள்ளி, தக்கலை அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில் இந்து கல்லூரி மற்றும் கோணம் அரசினர் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இடங்களில் இன்று (23.03.2019) நடைபெற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பினை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரேபார்வையிட்டார்.

இப்பயிற்சி வகுப்பில் தேர்தல் அலுவலர் பிரசாந்த்வடநேரே பேசியதாவது : -வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் - 2019, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18-ஆம் தேதியன்று நமது மாவட்டத்தில் தேர்தல் வாக்குப்பதிவு பணியினை மேற்கொள்ளும் நீங்கள் வாக்குப்பதிவு நாளில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதை குறித்தும், ஒவ்வொரு அலுவலர்களும் மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தினை கையாள்வது குறித்தும், விவிபிஏடி கருவியின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும். இப்பயிற்சி வகுப்பினை 8,132 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் நல்ல முறையில் பயன்படுத்தி, சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு ஆட்சியர் பேசினார்.

நடைபெற்ற முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகளில், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, சார் ஆட்சியர் (பத்மநாபபுரம்) ஷரண்யா அறி, உதவி ஆணையர் (கலால்) சங்கரலிங்கம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயராணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிறிஸ்டோபர் ஜெயராஜ்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory