» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாப பலி

சனி 23, மார்ச் 2019 1:08:26 PM (IST)

பூதப்பாண்டி அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி  பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறையை அடுத்த லேபர் காலனியை சேர்ந்தவர் விஜயகுமார் (44). இவர் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத்தில் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி விமலா (43). இவர் தனியார் ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு வின்சி, வினிதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.நேற்று காலையில் கணவன்- மனைவி இருவரும் இறச்சகுளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் பைக்கில் சென்றனர்.

இறச்சகுளம் பகுதியில் சென்ற போது, எதிரே நாகர்கோவிலில் இருந்து ஞாலம் நோக்கி அரசு பேருந்து வந்தது. இதனால் விஜயகுமார், மோட்டார்பைக்கை சாலையோரமாக திருப்பிய போது குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி நிலைதடுமாறியது. இதில் பைக்கிலிருந்து விமலா சாலையில் விழுந்தார். அவர் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியது. 

இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே விமலா பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான விமலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் பலத்த மழை: நெல் அறுவடை பாதிப்பு

வியாழன் 17, அக்டோபர் 2019 11:15:10 AM (IST)

குமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம்

வியாழன் 17, அக்டோபர் 2019 10:18:32 AM (IST)

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory