» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குருசுமலை திருப்பயணம்: 31ம் தேதி தொடக்கம்

சனி 23, மார்ச் 2019 12:10:19 PM (IST)

குருசுமலையில் இந்த ஆண்டு திருப்பயணம்  இம்மாதம்   31 ஆம் தேதி தொடங்குகிறது.

குமரி கேரள எல்லைப் பகுதியான வெள்ளறடை-பத்துகாணியில்  சுமார் 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட குருசுமலை உச்சியில் திருச்சிலுவை நிறுவப்பட்டுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்கால நாள்களையொட்டி மலை   அடிவாரத்திலிருந்து மலை உச்சியிலுள்ள திருச்சிலுவையை நோக்கி திருப்பயணம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருப்பயணம் மார்ச் 31,  ஏப்ரல் 7 ஆம் தேதி வரையும் பின்னர் ஏப்ரல் 18,19 ஆகிய தேதிகளிலும் நடைபெறுகிறது.

இது குறித்து குருசுமலை திருத்தல இயக்குநர்  வின்சென்ட் கே. பீட்டர் செய்தியாளர்களிடம் கூறியது இந்த ஆண்டு திருப்பயணத்தின் முன்னோட்டமாக  மார்ச் 30 ம் தேதி கடையாலுமூடு தேவாலயத்திலிருந்து குருசுமலை அடிவாரம் வரை மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது. 31 ஆம் தேதி பிற்பகல்  1 கி.மீ.  தொலைவு கொண்ட கொடிப்பயணம் வெள்ளறடையிலிருந்து குருசுமலை வரை நடைபெறுகிறது.  

திருப்பயண நாள்களில் காலை முதல் இரவு வரை மலை அடிவாரத்திலும், மலை உச்சியிலும் திருப்பலி, மறையுரை, ஜெபவழிபாடு நடைபெறுகின்றன. தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடைபெறும் இத்திருப்பலிகளில்  பல்வேறு சபைப் பிரிவுகளைச் சேர்ந்த அருள்பணியாளர்கள், போதகர்கள் பங்கேற்கின்றனர். திருப்பயணத்தில் பங்கேற்கும் மக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory