» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொடிக்கம்பங்கள்,பீடங்களை உடனே அகற்ற வேண்டும் : கன்னியாகுமரி ஆட்சியர் உத்தரவு

புதன் 20, மார்ச் 2019 7:31:58 PM (IST)

பாராளுமன்ற தேர்தல் 2019 ஐ முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து கொடிக்கம்பங்கள் மற்றும் கொடிகம்ப பீடங்களை உடனடியாக அகற்றிட வேண்டும் என மாவட்டஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் 2019 தொடர்பான அறிவிக்கை இந்திய தேர்தல் ஆணையத்தால் 10.03.2019 அன்று வெளியிடப்பட்டு 10.03.2019 முதல் மாதிரி நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் கொடிமரங்களை அகற்றிடவோ அல்லது மறைக்கவோ செய்ய மாவட்ட ஆட்சியரால் உத்தரவிடப்பட்டது. தற்பொழுது, பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் பொதுமக்கள், பயணிகளுக்கு இடையூறாக உள்ள கொடிக் கம்பங்கள் நிறுவப்படுவதை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அனுமதி , உரிமம் இல்லாமல் பொது இடங்களிலும் , சாலையோரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள் பயணிகள் , பாதசாரிகளுக்கும் இடையூறாக உள்ளதால் அவற்றை அமைக்க அனுமதியில்லை.மேலும், இந்த உயர்நீதிமன்ற உத்தரவினை உடனடியாக செயல்படுத்தி, செயல்படுத்தப்பட்டதற்கான நிலவர அறிக்கையினை 25.03.2019-க்குள் மாண்பமை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சியில் மாநகராட்சி ஆணையாளரும், மூன்று நகராட்சிகளிலும் நகராட்சி ஆணையர்களும், 55 பேரூராட்சிகளில் செயல் அலுவலர்களும், 95 கிராம ஊராட்சிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் தங்களது எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்பட்ட உத்தரவின்படி மறைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்கள், கொடிக்கம்ப பீடங்கள் உட்பட அனுமதியின்றி பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கொடிக்கம்பங்கள் மற்றும் கொடிகம்ப பீடங்களை உடனடியாக அகற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அகற்றப்பட்டதற்கான அறிக்கையினை உரிய ஆவணங்களுடன் 23.03.2019-க்குள் மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி செய்யப்படவுள்ள இந்த பணிக்கு அரசியல் கட்சிகள் அமைப்புகள் மற்றும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory